ஆப்நகரம்

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: அண்ணா நகரும் இணைந்தது!

தலைநகர் சென்னையில் உள்ள மொத்தம் 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது

Samayam Tamil 29 May 2020, 4:05 pm
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 4,706 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிர மாநிலம் உள்ளது. அம்மாநிலத்தில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50,000த்தை தாண்டியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,000த்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 12ஆக உயர்ந்துள்ளாது. மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 12,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், திருவொற்றியூர், மணலி, மாதவரம் என்பன உள்ளிட்ட சென்னையில் உள்ள மொத்தம் 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


அதிகபட்சமாக ராயபுரத்தில் 2 ஆயிரத்து 324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடம்பாக்கத்தில் 1646 பேர், தேனாம்பேட்டையில் 1412 பேர், திரு.வி.க நகரில் 1393 பேர், தண்டையார்பேட்டையில் 1322 பேர், அண்ணாநகரில் 1089 பேர் பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1,000த்தை தாண்டிய நிலையில், தற்போது அந்த வரிசையில் அண்ணா நகரும் சேர்ந்துள்ளது.

அடுத்த செய்தி