ஆப்நகரம்

மாநகராட்சி பள்ளிகளில் சோலார் மூலம் 3 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சோலார் மூலம் 3,064 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Nov 2018, 4:56 am
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சோலார் மூலம் 3,064 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil chennai.


சென்னையில் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 662 கட்டிடங்களில் 3,064 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக ரூ.22.42கோடியும் நிதி ஒதுக்கீடு செய்தது. சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மண்டல அலுவலகங்கள், தெரு விளக்குகள் ஆகியவை உள்ளன. இவற்றிற்கு ஆண்டுக்கு 200 மெகாவாட் மின்சாரம் வரை தேவைப்படுகிறது. இதில், ஒரு யூனிட்டிற்கு ரூ.8 வீதம் கட்டணம் செலுத்தி வருகிறது சென்னை மாநகராட்சி. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 கோடிக்கும் மேல் கட்டணம் செலுத்துகிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு சூரிய மின்சக்தி திட்டம் கடந்த 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சென்னை மாநகராட்சியிலும் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையைச் சுற்றிலும் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி தயாரிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட நடவடிக்கையாக சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியிலுள்ள சென்னை மாநகராட்சியின் நடுத்தர பள்ளியில், இந்த சூரிய ஒளி மின் உற்பத்தி சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி