ஆப்நகரம்

Chennai Central Railway Station:பொங்கல் திருநாள்... இன்னைக்கு ஓடுற எலக்ட்ரிக் ட்ரைன்கள் எவ்வளவு?

அரசு விடுமுறை நாள் என்பதால் நாளை (ஜனவரி 14) புறநகர் மின்சார ரயில்களின் சேவை குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 14 Jan 2021, 9:19 am
கொரோனா பொதுமுடக்க தளர்வுக்கு பிறகு, கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Samayam Tamil கோப்பு படம்
சென்னை புறநகர் ரயில் சேவை


ரயில் சேவையின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போதைய நிலையில் வார நாட்களான திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை 660 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.ஞாயிறு மற்றும் அரசு பொத விடுமுறை நாட்களில் 401 ரயில் சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையொயொட்டி நாளை (ஜனவரி 14) அரசு பொது விடுமுறை என்பதால் மொத்தம் 401 மின்சார புறநகர் ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேஜஸ் ரயில்: மதுரை டூ சென்னை இனி உணவுடன் பயணம்!

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் ஆகிய இடங்களுக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர் ஆகிய இடங்களுக்கும் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி