ஆப்நகரம்

சென்னை தெற்கு ரயில்வேக்கு 12.8% வருவாய் உயர்வு

கடந்த ஒரு மாதத்தில் தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தின் வருவாய் 12.8% உயர்ந்துள்ளது.

Samayam Tamil 19 Jun 2018, 5:12 am
கடந்த ஒரு மாதத்தில் தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தின் வருவாய் 12.8% உயர்ந்துள்ளது.
Samayam Tamil double-decker-train-lucknow


இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிடுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

கடந்த மே மாதத்தில் மட்டும் 4.32 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் பயணித்தவர்களின் எண்ணக்கையை விட 2.13% அதிகம். இதன் மூலம் ரூ.289.5 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 12.82 சதவீதம் அதிகமாகும்.

261 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளன. அபராதமாக ரூ.1.21 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. தண்டவாள பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, தேவையான இடங்களில் கான்கிரீட் போடப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் குற்றச்செயல்கள் தொடர்பாக 4,002 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அபராதமாக ரூ.10,89,260 வசூலாகியுள்ளது. பேசின்பிரிட்ஜ் மற்றும் கோபால்சாமி நீர் மறுசுழற்சி நிலையங்களில் 11 ஆயிரத்து 60 லிட்டர் மறுசுழற்சி செய்யப்பட்டு உள்ளன.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்