ஆப்நகரம்

கமிஷனுக்காக கடன் வாங்கும் தமிழ்நாடு அரசு: ஸ்டாலின் காட்டம்

கமிஷனுக்காகவே கடன் வாங்கி தமிழ்நாட்டை கடன் சுமையில் தள்ளி விட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Samayam Tamil 23 Feb 2021, 9:05 pm
தமிழ்நடு பட்ஜெட் 2021 இடைக்கால பட்ஜெட்டாக இன்று அமலான நிலையில், இதனை கமிஷனுக்காக கடனில் தள்ளிய நிதிநிலை என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
Samayam Tamil stalin


இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டதாவது:
“தமிழ்நாட்டு மக்களின் நலனைப் புறக்கணித்து, முறைகேடுகள் செய்து, கமிஷன் அடிப்பதற்காகவே கடன் வாங்கி, 5.70 லட்சம் கோடி ரூபாயாகக் கடன்சுமையை அதிகரித்து, முதலமைச்சர் திரு. பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் இருவரும் மாநிலத்திற்கு என்றும் நீங்காத நிதிப்பேரிடரை உருவாக்கி விட்டனர்.

தேர்தலுக்கு முன் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் கூட, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விடுத்து - அரசு கஜானாவை காலி செய்துள்ளார் முதலமைச்சர் திரு. பழனிசாமி!

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும் - “ஊழலுக்கு இணைந்த அ.தி.மு.க.வின் இந்தக் கறைபடிந்த கரங்கள்” நிதி மேலாண்மையில் ஏற்படுத்தியுள்ள அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து - தமிழகத்தின் நிதி நிலைமை - தமிழக மக்களுக்காக - தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக - என்பதை உறுதிப்படுத்திடும் வகையில் வேகமாகச் சீரமைக்கப்படும்!

அடுத்த செய்தி