ஆப்நகரம்

ஒரு ரயில் நிலையமே மூடல் - சென்னை சம்பவத்தின் பரபரப்பு பின்னணி!

சென்னையில் உள்ள புறநகர் ரயில் நிலையம் மூடப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 12 May 2020, 12:24 pm
தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி 8,002 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 2,051 பேர் குணமாகி இருக்கின்றனர். 53 பேர் பலியாகியுள்ளனர். 5,898 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 4,372 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையின் பல்வேறு பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த காவலர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
Samayam Tamil சென்னை மந்தைவெளி


இந்நிலையில் சென்னை மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள அறையில் தங்கி சுமார் 40 ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இவர்களில் 29 வயதான காவலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

பேருந்து, ரயில், மெட்ரோ, ஆட்டோவில் எத்தனை பேர் பயணிக்கலாம்? ரெடியாகும் தமிழக அரசு!

இந்த சூழலில் சம்பந்தப்பட்ட காவலரின் உடனிருந்த 39 காவலர்களுக்கும் வைரஸ் பரவியுள்ளது. இதனால் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக காவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் புதிதாக 4 ஆயுதப்படை காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் மருத்துவர்கள் அறிவுரையின்படி மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவலர்கள் தங்கியிருந்த மந்தைவெளி எம்.ஆர்.டி.எஸ் எனப்படும் பறக்கும் ரயில் நிலையம் மூடப்பட்டது. சென்னையில் முதல்முறையாக ரயில் நிலையம் ஒன்று மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி