ஆப்நகரம்

அண்ணா சாலையில் மீண்டும் ஓட்டை! குழி பறிக்கிறதா மெட்ரோ?

சென்னை அண்ணா சாலையில் ஞாயிறு இரவு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

TNN 19 Nov 2017, 11:44 pm
சென்னை அண்ணா சாலையில் ஞாயிறு இரவு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Samayam Tamil sudden groove halts traffic in anna salai
அண்ணா சாலையில் மீண்டும் ஓட்டை! குழி பறிக்கிறதா மெட்ரோ?


சென்னை அண்ணா சாலை மாநகரின் முக்கியச் சாலைகளில் ஒன்றாகும். இந்த சாலையை ஒட்டியே மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, அண்ணா சாலையில் திடிரென பெரிய பள்ளம் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

சில மாதங்களுக்கு முன்பாக தோன்ற கிடுகிடு பள்ளத்தில் ஒரு அரசுப் பேருந்தும் கார்களும் பல்டி அடித்துவிட்டன. ஆனால், இதில் யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை.



இந்நிலையில், ஞாயிறு இரவு இதே சாலையில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ் பேருந்து நிறுத்தம் அருகே மீண்டும் பெரிய பள்ளம் விழுந்துள்ளது. இதனை அறிந்த போலீசார் பள்ளத்தைச் சுற்றி தடுப்பு அமைத்து, வாகனங்களை வேறு பாதையில் திருப்பி விட்டனர்.

அரசு ஊழியர்கள் பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மெட்ரோ ரயிலுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியால்தான் பள்ளம் விழுவது தொடர்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி