ஆப்நகரம்

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் உள்மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 4 May 2018, 5:31 pm
தமிழகத்தின் உள்மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil chennai-ambani-sings
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


வெப்பச்சலனம் காரணமாக தென் பகுதி மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, வட தமிழக கடலோர மாவட்டங்களை சேர்ந்த ஒருசில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொங்கு மண்டல பகுதிகளில் பெய்த மழை அதிகப்பட்சமாக திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 14 செ.மீ. மழையும், சேலம் மாவட்டம் ஆத்தூரில் 13 செ.மீ. மழையும் திருப்பூர், சத்யமங்கலத்தில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்