ஆப்நகரம்

குடை ரெடியா?... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 10 Mar 2022, 12:42 pm
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil Tamil Nadu Weather Update
கோப்புப்படம்

இதுகுறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

"மார்ச் 10 மற்றும் 11 தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல், பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மார்ச் 12 முதல் 14 வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி