ஆப்நகரம்

சென்னையில் விரைவில் வருகிறது பேட்டரி பேருந்துகள்!!!

சென்னையில் பேட்டரி சக்தியில் இயங்கும் பேருந்துகளை தமிழக அரசு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 26 Aug 2018, 1:29 pm
சென்னையில் பேட்டரி சக்தியில் இயங்கும் பேருந்துகளை தமிழக அரசு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil சென்னையில் விரைவில் வருகிறது பேட்டரி பேருந்துகள்!!!
சென்னையில் விரைவில் வருகிறது பேட்டரி பேருந்துகள்!!!


உலக வெப்பமயமாதல் மற்றும் இயற்கை வளங்கள் அதிக அளவில் அழிக்கப்படுதல் ஆகியவை மனித இனத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகின் வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களில் இயங்கும் வாகனங்களுக்குப் பதிலாக, மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கு மாறி வருகின்றன.

அந்த வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த சி-40 என்ற நிறுவனம், சென்னையில் பேட்டரி சக்தியில் இயங்கும் பேருந்துகளை இயக்க, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.எம்.விஜயபாஸ்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்காக அடையாறு, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பேருந்து பணிமனைகளையும் ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, தி.நகர், பிராட்வே, பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட 15 வழித்தடங்களில் பேட்டரி சக்தியில் இயங்கும் பேருந்துகளை தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி