ஆப்நகரம்

ஐஐடி மாணவர்கள் கடும் அதிர்ச்சி; மருத்துவ துறை பரபரப்பு உத்தரவு!

சென்னை ஐஐடிக்குள் விஸ்வரூப வேகத்துடன் கொரோனா வைரஸ் அடுத்த ரவுண்டு வந்துள்ளதால் மாணவர்கள், பணியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.

Samayam Tamil 21 Apr 2022, 3:39 pm
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஊரடங்கு காலத்தின் பொதுபோக்குவரத்து முழுவதும் தடை செய்யப்பட்டு இருந்தது.
Samayam Tamil சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி


இதனால் பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணம் செய்வதற்கு தடை செய்யப்பட்டது. மேலும் பள்ளி கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டதால் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா நோய் பரவல் ஒரளவு குறைந்துள்ளதை தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதோடு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிரடியாக விலக்கி கொள்ளப்பட்டது.


மேலும் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

ரயில் சேவையில் திடீர் மாற்றம்; தென்மாவட்ட பயணிகள் உஷார்!

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நோய் பாதிப்பு மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. தற்போது டெல்லி, உத்தரபிரதேசம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

அந்தவகையில் தமிழ்நாட்டிலும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை கிண்டி ஐஐடியில் மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வதைக்கும் புதிய சிக்கல்; கவலையில் ஓய்வூதியர்கள்!

அதே சமயம் பாதிக்கப்பட்ட 10 பேரில் 3 பேருக்கு அறிகுறிகள் இல்லை என்றும், 7 பேருக்கு மட்டும் லேசான அறிகுறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஐடியில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வளாகத்தில் உள்ள மேலும் 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஐஐடி வளாகத்தில் ஆய்வு செய்து பரிசோதனைகளை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு நெறிமுறையை கடைபிடிக்கவும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்.

அடுத்த செய்தி