ஆப்நகரம்

சடலத்தை அடக்கம் செய்ய உறவினர்கள் தயக்கம்; ஊராட்சி மன்றத்தலைவரை கொண்டாடும் மக்கள்!

சென்னை அருகே மீஞ்சூரில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் சடலத்தை புதைக்க உறவினர்கள் தயங்கினர். இதை பார்த்த ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் தாமாக முன்வந்து கவச உடையுடன் இறுதி சடங்குகள் செய்துள்ளார். இந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 11 May 2021, 11:01 am
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், தடபெரும்பாக்கம் ஊராட்சி, திருவேங்கிடபுரம் பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
Samayam Tamil இறந்தவரின் உடல் கொண்டு வரப்படுகிறது
இறந்தவரின் உடல் கொண்டு வரப்படுகிறது


இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இதையடுத்து இறந்த பெண்ணின் சடலம் பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் மூலம் நேராக சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, பொக்லைன் மூலம் குழி தோண்டப்பட்டு புதைப்பதற்கு தயாராக இருந்தது.

ஆனால் கொரோனா நோய் மீதான அச்சம் காரணமாக ஆம்புலன்சில் இருந்த சடலத்தை இறக்கி, குழிக்கு கொண்டு சென்று புதைக்க யாரும் முன் வரவில்லை. பணத்துக்கு கூட கூலியாட்கள் யாரும் வரவில்லை. மேலும் இறந்த பெண்ணின் உறவினர்களும் சடலத்தின் அருகில் வருவதற்கு அச்சப்பட்டனர்.

பூட்டு போதாது கடைக்கு சீல் வைச்சிடுங்க; அந்த கடைகளில் அப்படி என்ன விசேஷம்?

இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தடபெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு தானாக முன் வந்து சம்பவ இடத்துக்கு வந்துள்ளார்.

பின்னர் கவச உடைகளை அணிந்து கொண்டு ஆம்புலன்சில் இருந்து சடலத்தை இறக்கினார். பின்னர் கயிறு மூலம் சடலத்தை குழிக்குள் கீழே இறக்கி சுகாதாரத் துறையினரின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பாதுகாப்பாக புதைத்தனர். இந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி