ஆப்நகரம்

மயங்கி விழுந்ததில் தந்தை சாவு; அப்புறம் மகன் ஏன் கைதானார்?

சென்னை பள்ளிக்கரணையில் குடும்ப தகராறில் கீழே தள்ளிவிட்டதில் தந்தை பலியானார். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மகனை கைது செய்தனர்.

Samayam Tamil 9 May 2021, 5:13 pm
சென்னை பள்ளிக்கரணை அம்பாள்நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (70). ஓய்வு பெற்ற மாநகர போக்குவரத்து கழக ஊழியர். இவரது மகன் சபரீஷ் (30). ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் டெலிவரி பிரிவில் வேலை செய்து வருகிறார்.
Samayam Tamil கைது செய்யப்பட்டதை விளக்கும் படம்
கைது செய்யப்பட்டதை விளக்கும் படம்


கடந்த 5ம் தேதி சபரீஷ் தனது தந்தை பிரேம்குமார் திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக கூறி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரேம்குமார் இறந்துவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து பள்ளிக்கரணை போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து பிரேம்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கினர்.

சிகிச்சைக்கு தவிக்கும் கொரோனா நோயாளிகள்; அதுவும் மாவட்ட தலைமை மருத்துவமனையிலயா?

இதற்கிடையே பிரேம்குமார் கொலை செய்யப்பட்டு இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையை டாக்டர்கள் அளித்தனர். எனவே பள்ளிக்கரணை போலீசார் சபரீஷிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர்.

விசாரணையில் தந்தை பிரேம்குமாருடன் ஏற்பட்ட சிறிய தகராறில் அவரை கீழே தள்ளிவிட்டதையும், யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரே மயங்கி விழுந்து விட்டதாகவும் நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். எனவே, கொலை வழக்காக பதிவு செய்து பள்ளிக்கரணை போலீசார் சபரீஷை கைது செய்தனர்.

அடுத்த செய்தி