ஆப்நகரம்

செல்ல நாய் குட்டியின் சேட்டை; உரிமையாளருக்கு என்ன ஆச்சு?

சென்னை, திருவொற்றியூரில் சேட்டை செய்துவிட்டு தண்டவாளத்தில் தப்பி ஓடிய தனது செல்ல நாய் குட்டியை பிடிக்க சென்றபோது ரயில் மோதியதில் உரிமையாளர் இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Samayam Tamil 10 May 2021, 4:52 pm
சென்னை, திருவொற்றியூர் விம்கோ அடுத்த ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் சரவணன் (35). தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வந்தார். இவரது வீட்டில் நாய் குட்டி ஒன்று உள்ளது. அந்த நாய் குட்டியை சரவணன் மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார்.
Samayam Tamil விம்கோ நகர் பெயர் பலகை
விம்கோ நகர் பெயர் பலகை


நேற்று முன்தினம் இரவு விம்கோ நகர் ரயில் நிலைய நடைமேடை பகுதியில் தனது நாயை நடை பயிற்சிக்கு அழைத்து சென்றார். அப்போது திடீரென அந்த நாய் சங்கிலியில் இருந்து கழன்று சென்று சரவணனிடம் சேட்டைகள் செய்துள்ளது. பின்னர், நாய் துள்ளிக்குதித்தபடி தண்டவாளத்தில் தாறுமாறாக ஓடியது.

அந்த வழித்தடத்தில் அடிக்கடி ரயில் வராது என்பது சரவணனுக்கு தெரிந்து இருந்ததால் நாயை பிடிக்க தண்டவாளத்தில் விரட்டியபடி சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக வந்த ரயில் இஞ்சின் சரவணன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்.

ஆக்சிஜனுடன் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ்: நடத்துறது யாருன்னு பாத்தா அசந்துருவீங்க!

இதுகுறித்த புகாரின்பேரில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாய்க்கு என்ன ஆனது? எனவும் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி