ஆப்நகரம்

77 வீடுகளை இடித்த சென்னை மாநகராட்சி... நேரில் சந்தித்த திருமாவளவன்

மக்களை அப்புறப்படுத்தி அவர்களை அனாதையாக மாற்றி நிற்க வைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

Samayam Tamil 21 Jan 2021, 10:40 pm
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள தங்கவேலு தெருவில் மக்கள் வசிக்கும் 77 வீடுகளை சென்னை மாநகராட்சி இடித்து விட்டு அங்கு வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி உள்ளது.
Samayam Tamil thirumavalavan meets 77 families whose houses were demolished by chennai corporation
77 வீடுகளை இடித்த சென்னை மாநகராட்சி... நேரில் சந்தித்த திருமாவளவன்


இதனை அறிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சந்தித்து அந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்

காலம் காலமாக சென்னையில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி அவர்களை அனாதையாக மாற்றி நிற்க வைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

இந்த மக்களை இங்கிருந்து அப்புறப்படுத்தி படப்பை, செம்மஞ்சேரி, கண்ணகி நகர் என நெடுந்தூரத்தில் அவர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கினால் அவர்களின் தொழில் வருமானம் பாதிக்கப்படும்.

எனவே இதே பகுதியில் வீடுகள் கட்டி அந்த மக்களை இங்கேயே குடி அமர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்

முன்னதாக வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுக்க விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடத்தப்பட்ட் வரும் போராட்டத்தில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி