ஆப்நகரம்

சென்னை பஸ்ல இதெல்லாமா நடக்குது? ஆச்சர்யத்தில் பயணிகள்!

பொதுமக்கள் நிதியில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் விதமாக சென்னை மாநகரப் பேருந்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது

TNN 14 Dec 2017, 9:56 pm
பொதுமக்கள் நிதியில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் விதமாக சென்னை மாநகரப் பேருந்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
Samayam Tamil this is the reason for the surprise of the chennai bus passangers
சென்னை பஸ்ல இதெல்லாமா நடக்குது? ஆச்சர்யத்தில் பயணிகள்!


வடபழனி மற்றும் பெசன்ட் நகர் இடையே செல்லும் 5E பேருந்து பயணிகளுக்கு இன்று மாலை ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. பொதுமக்கள் நிதியில் நடத்தப்படும் உரூர் ஒல்காட் குப்பம் விழாவை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் அவர்களுக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதன்படி மாலை 5.30 மணியளவில் பரதநாட்டிய கலைஞர் ஸ்வேதா பிரசந்தா பேருந்தில் இருந்த பயணிகளுக்கு ஆச்சர்யம் அளிக்கும் விதமாக, திடீரென பேருந்தில் பரதநாட்டிய உடையுடன் ஏறினார். பின்னர், அவர் பேருந்தின் மத்தியில் பரதநாட்டியம் ஆடத் தொடங்கியதால் பேருந்தில் இருந்த பயணிகள் ஆச்சர்யமடைந்தனர்.

சுமார் 20 நிமிடம் பேருந்தில் நடைபெற்ற அந்த பரதநாட்டிய நிகழ்ச்சியை பயணிகள் அனைவரும் ஆச்சர்யத்தோடு ரசித்தனர்.

அடுத்த செய்தி