ஆப்நகரம்

மெரினாவில் கரை ஒதுங்கிய 3 ஆண் சடலங்கள்: காவல்துறையினர் தீவிர விசாரணை

சென்னை மெரினா கடற்கரையில் மூன்று சடலங்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Samayam Tamil 4 Mar 2019, 1:43 pm
சென்னை மெரினா கடற்கரையில் மூன்று சடலங்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil download-12jpg


2004 ஆம் ஆண்டு சுனாமி வந்ததை தொடர்ந்து சென்னை மெரினாவில் குளிப்பவர்களை அலை இழுத்து சென்று உயிரிழக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பீச் ரோந்தில் காவல்துறையினர் கடலில் குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தபோதும், சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து குளிப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கிறது என்று ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடலில் குளித்த கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் இழுத்துச் செல்லப்பட்டு உடல் கரை ஒதுங்கியது.

உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் காலை 7.30 மணிக்கு அடையாளம் தெரியாத சுமார் 27 வயது ஆணின் சடலம் கரை ஒதுங்கியது. சில நிமிடங்களிலே எம்.ஜி.ஆர் நினைவிடம் பின்புறம் ஜெ.என்.என் கல்லூரியில் பயின்று வந்த கண்ணன் என்பவரது சடலம் கரை ஒதுங்கியது.

இதைத்தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு கடலில் குளித்து கொண்டிருந்த செஜயசந்திரன் அலையில் சிக்கிக்கொண்டதால் அவரின் சடலம் கரை ஒதுங்கியது.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மூன்று ஆண் சடலங்களையும் கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கரை ஒதுங்கிய உடல்கள் மீது காயங்கள் இல்லை என்று தெரிவித்த காவல்துறையினர், அடையாளம் தெரியாத சடலம் யாருடையது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்