ஆப்நகரம்

அரிய பறவைகளை வேட்டையாடிய மூவரை பிடித்த வனத்துறயினர்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கொத்திமங்களம் பகுதியில் அரிதான பறவைகளை வேட்டையாடிய மூவரை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

Samayam Tamil 17 Sep 2018, 4:43 pm
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கொத்திமங்களம் பகுதியில் அரிதான பறவைகளை வேட்டையாடிய மூவரை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
Samayam Tamil dc-Cover-d584b46p4iqn9j8e6nd1mkkcj2-20161005071534.Medi.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கொத்திமங்களம் பகுதியில் அரிய வகை வெளிநாட்டு பறைவைகள் வருவது வழக்கம். இந்நிலையில் சமீபகாலமாக இந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் காணப்படும் பறவைகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு புகார்கள் கிடைத்தது.

இந்த புகார் தொடர்பாக ஆய்வு செய்ய, வனத்துறையை சேர்ந்த மோஹன் அந்த பகுதிக்கு சென்றுள்ளர். அப்போது இறந்த நாரை மற்றும் கொக்குகளை சிலர் எடுத்துவருவதை பார்த்துள்ளார்.

உடனடியாக அவர்களை பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். இவர்கள் வேட்டையாடிய கொக்குகள் வனத்துறை பாதுகாக்க வேண்டிய ஷெட்டியூள் 4 பிரிவில் உள்ளது.

மேலும் இவர்கள் முதல் முறையாக வேட்டையாடியதால் கைது செய்ய வாய்ப்பில்லை என்று கூறிய மோகன் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி