ஆப்நகரம்

ஹேப்பி நியூஸ்: ஊரடங்கிலும் 200 பேருந்துகள் இயக்கம் - அதிரடி அறிவிப்பு!

சென்னையில் 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 10 May 2021, 9:57 am
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் மே 24ஆம் தேதி வரை இரு வார காலத்துக்கு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tn bus service


இரு வாரம் தமிழகத்தில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்துக்குள்ளும், மாவட்டத்துக்கு வெளியேயும் பேருந்துசேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, டாக்ஸி ஆகியவையும் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் யார்? எடப்பாடி கை ஓங்குகிறதா? அதிமுகவுக்குள் நடப்பது இதுதான்!

அதேசமயம் தமிழக அரசின் முக்கிய துறைகள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் தங்கள் பணிகளை வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “தமிழகத்தில் கொரானா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்கு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
ரேஷன் அட்டைக்கு 2000ரூ: இன்று இல்லை, எப்போது தெரியுமா?
பொதுமக்களின் நலன் கருதி இரண்டு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த அளவில் பணியாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி வழங்குவது?
அந்த வகையில் அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பணிக்கு வருகின்ற நிலையில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக முதல்கட்டமாக 200 பேருந்துகள் இன்று முதல் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். தலைமைச்செயலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், சென்னை பெருநகர் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் அரசு விதித்துள்ள நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி