ஆப்நகரம்

TTV Dinakaran: தமிழிசை மற்றும் எடப்பாடியின் குரலாய் ரஜினி பேசுகிறார்- தினகரன் குற்றச்சாட்டு

நடிகர் ரஜினிகாந்த் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்திராஜன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் குரல்களாக ஒலிக்கிறார் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Samayam Tamil 31 May 2018, 2:01 pm
நடிகர் ரஜினிகாந்த் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்திராஜன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் குரல்களாக ஒலிக்கிறார் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
Samayam Tamil 3669
டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்


இன்று சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், திமுக அவைக்கு திரும்ப சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தேன். முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்கவில்லை. ஏனெனில் அவர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற முதல்வர்கள் அல்ல என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், அம்மாவின் தொண்டர்களாகிய எங்களுக்கு முதல் எதிரி திமுகதான். அவர்கள் எதிர்கட்சியே தவிர எதிரிகள் அல்ல. ஜனநாயக கடமையாற்ற எதிர்கட்சிகளின் தேவை வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

பின்பு ரஜினிகாந்த் விவகாரம் தொடர்பாக பேசிய தினகரன், செய்தியாளர்களிடம் ரஜினி கோபமாக பேசியது தவறு என்றார். தூத்துக்குடி விவகாரம் சினிமா படப்பிடிப்பு அல்ல. 68 வயதில் தியானம் செய்யும் ரஜினிகாந்த் பக்குவமாக நடந்துக்கொள்ள வேண்டும்.

இந்த விவகாரம் மூலம் ரஜினிகாந்தின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது கடமை. அதில் ரஜினிகாந்த் ஆவேசமாக பேசியது அவசியமில்லாதது என்றார் டிடிவி தினகரன்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மற்றும் ஜல்லிக்கட்டு வேண்டி நடைபெற்ற மக்கள் போராட்டங்களில் சமூகவிரோதிகள் புகுந்து விட்டதாக ரஜினிகாந்த் சொல்வது தவறு. போலீஸார் ஒன்றும் உத்தமர்கள் அல்ல. எல்லா துறைகளிலும் கருப்பு ஆடுகள் உள்ளன என்று அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டிடிவி தினகரன் பேசினார்.

அடுத்த செய்தி