ஆப்நகரம்

அறிமுகமானது உதான் திட்டம்: சென்னை-மைசூர் விமான சேவை இன்று தொடக்கம்

மிகக் குறைந்த கட்டணத்தில் முக்கிய நகரங்களுக்கு இடையில் விமானப் பயணம் செய்யும் உதான் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. முதல் கட்டமாக சென்னை மற்றும் மைசூருக்கு இடையே விமான சேவை தொடங்கப்படுகிறது.

TNN 20 Sep 2017, 1:33 pm
சென்னை: மிகக் குறைந்த கட்டணத்தில் முக்கிய நகரங்களுக்கு இடையில் விமானப் பயணம் செய்யும் உதான் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. முதல் கட்டமாக சென்னை மற்றும் மைசூருக்கு இடையே விமான சேவை தொடங்கப்படுகிறது.
Samayam Tamil udan flight service is set to start between chennai and mysore from today onwards
அறிமுகமானது உதான் திட்டம்: சென்னை-மைசூர் விமான சேவை இன்று தொடக்கம்


குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை செய்யும் உதான் திட்டத்தின்படி, இன்று ட்ரூஜெட் விமான நிறுவனத்தின் விமானம் மைசூரிலிருந்து சென்னைக்கு புறப்படுகிறது. இதில் 40 பயணிகள் பயணிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் பயணிக்கும் பயணிகளுக்கு சென்னையில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முதல் பயணத்தில் விமானச் சேவை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவும் பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சேவையின் மூலம் பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம் மேற்கொள்ளலாம். முதல்கட்டமாக இந்தச் சேவையில் கீழ் சென்னை-மைசூர் இடையே தினமும் விமானங்கள் இயக்கப்படவுள்ளன. சேலம், நெய்வேலி, மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு இந்தச் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

UDAN Flight service is set to start between Chennai and Mysore from today onwards.

அடுத்த செய்தி