ஆப்நகரம்

நாளை முதல் சுரங்கப்பாதையில் பயணிக்க உள்ள மெட்ரோ ரயில்!

நாளை முதல் சுரங்கப்பாதையில் பயணிக்க உள்ள மெட்ரோ ரயில்!

TOI Contributor 13 May 2017, 11:24 am
திருமங்கலம் – நேரு பூங்கா இடையேயான சுரங்க மெட்ரோ ரயில் சேவை நாளை (14.05.17) முதல் தொடங்கவுள்ளது.
Samayam Tamil underground metro train starts from may 14
நாளை முதல் சுரங்கப்பாதையில் பயணிக்க உள்ள மெட்ரோ ரயில்!


சென்னை மாநகரின் போக்குவரத்தை குறைக்கும் மெட்ரோ ரயில் சேவை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 45 கிமீ தூரம் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ பாதைகள் அமைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டு சின்னமலை வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் திருமங்கலம் – நேரு பூங்கா சுரங்க ரயில் சேவை தொடங்க உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த சுரங்க ரயில் பாதை சேவையை தொடக்கி வைக்க உள்ளார். முழுக்க முழுக்க சுரங்க ரயில் பாதை வழியாகவே ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நேரு பூங்கா முதல் கோயம்பேடு வரை சுமார் 8 கிமீ தூரம் இந்த சுரங்க ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுரங்க ரயிலில் பயணிக்கும் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் மெட்ரோ துறையினரால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சுரங்க ரயில் என்பது முதல் முறை என்பதால் பயணிகள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

அடுத்த செய்தி