ஆப்நகரம்

தடுப்பூசி...அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!

ஜனவரி 17 ஆம் தேதி முதல் போலியோ தடுப்பூசி போடப்படும் என்றும், போலியோவை போல கொரோனாவையும் இந்தியாவை விட்டு விரட்டுவோம் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Jan 2021, 11:06 am
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான இரண்டாம் கட்ட ஒத்திகை பணி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று நடைபெற்று வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இப்பணிகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
Samayam Tamil கோப்பு படம்
மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் சென்னை விசிட்


அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மத்திய, மாநில அரசுகள் கடந்த ஓராண்டாக மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் பயனாக இந்தியாவில் வைரஸ் பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகள் பாராட்டத்தக்கது.

உலக அளவில் இந்தியாவில்தான் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவாகவும், குணமடைவோர் விகிதம் அதிகமாக உள்ளது. கொரோனா பரிசோதனைக்காக நாடு முழுவதும் மொத்தம் 2,300 ஆய்வகங்கள் இயங்கி வருகின்றன.

சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனின் தமிழக விசிட்: முழு திட்டம் இதுதான்!

குறுகிய கால இடைவெளியில் கொரோனா தடுப்பூசியை இந்தியா கண்டுபிடித்துள்ளது. இரண்டு தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முதல்கட்டமாக நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கப்படும்.

இவர்களை தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இதற்காக மாவட்டம்தோறும் ஐந்து மையங்கள் அமைக்கப்படுமம். கொரோனா தடுப்பு பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களின் பங்களிப்பு மகத்தானது.

மருந்து கிடைத்தாலும் தற்காலிக தீர்வுதான்: பூவுலகின் நண்பர்கள்

வரும் 17 ஆம் தேதி முதல் ( ஜனவரி) மூன்று நாட்களுக்கு, குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடப்படும். போலியோவை இந்தியாவை விட்டு விரட்டியதை போல், கொரோனாவை விரட்டியடிப்போம் என்று அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறினார்.

இந்த நிகழ்வின்போது தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அடுத்த செய்தி