ஆப்நகரம்

பெட்ரோல் குண்டுவீச முயற்சி; 'துக்ளக்' ஆசிரியர் 'ஷாக்’- மர்ம நபர்களை தேடும் போலீஸ்!!

'துக்ளக்' இதழின் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Samayam Tamil 27 Jan 2020, 9:04 am
சென்னை மயிலாப்பூர் பகுதியில் 'துக்ளக்' இதழின் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தியின் இல்லம் உள்ளது.
Samayam Tamil துக்ளக் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச முயற்சி : மர்ம நபர்களை தேடும் போலீஸ்


அங்கு இன்று திடீரென மூன்று இருசக்கர வாகனத்தில் ஆறு மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் கையில் பெட்ரோல் குண்டு இருப்பதை அங்கு பாதுகாப்புப் பணியில் போலீஸார் அறிந்த உடன், அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர்.

ஆனாலும், போலீஸாரின் பிடியில் சிக்காமல் அவர்களுக்கு 'டிமிக்கி' கொடுத்துவிட்டு மர்ம நபர்கள் ஆறு பேரும் தப்பியோடினர். இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

துக்ளக்கை கையகப்படுத்தினேனா? மனம் திறக்கும் குருமூர்த்தி

அந்தப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அதன் மூலம் துக்ளக் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச முயன்ற மர்ம நபர்களை போலீஸாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

முன்னதாக, சென்னையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி, துக்ளக் இதழின் பொன்விழா நடைபெற்றது. அதில், பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கடந்த 1971 ஆம் ஆண்டு, பெரியார் தலைமையில் சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டன.

பெரியார் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்க ரஜினி : வைகோ ஆவேசம்

அந்த சர்ச்சைக்குரிய ஊர்வலம் குறித்து துக்ளக் இதழ் அப்போது செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்பட்டது. அந்த செய்தியை இந்த வாரம் துக்ளக் மீண்டும் வெளியிட்டுள்ளது.

இத்தைய சூழலில், துக்ளக் ஆசிரியரின் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச முயற்சி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி