ஆப்நகரம்

வண்டலூர்: 13 சிங்கங்களுக்கு கோவிட்-19 அறிகுறி, பெண் சிங்கம் பலி!

மக்களுக்குப் பாதிக்கும் கோவிட்-19 சிங்கங்களையும் தாக்கி உயிரைப் பறிக்கிறது. நாடு முழுவதும் இதுபோன்ற சாவுகள் பதிவாகி வரும் சூழலில் சென்னையிலும் அதிர்ச்சி தொடர்கிறது.

Samayam Tamil 4 Jun 2021, 7:32 pm
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் உச்சத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த சூழலில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கத்திற்கு கொரோனா பரவியது இப்போது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil வண்டலூர்: 13 சிங்கங்களுக்கு கோவிட்-19 அறிகுறி, பெண் சிங்கம் பலி!


கொரோனா தொற்று 2ஆவது அலை நாட்டு மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு, கொரோனா மீட்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே நாட்டில் நமது பாதுகாப்பில் வளரும் உயிரினங்களுக்கும் அவ்வப்போது கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படி சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளைப் பரிசோதனை செய்ததில் 13 சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டன.
கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க குழு அமைப்பு
அதில் நிலா என்ற 9 வயது பெண் சிங்கம் சிகிச்சை பலனளிக்காமல் கொரோனா பாதிப்பு காரணமாக 3ஆம் தேதி உயிரிழந்துள்ளது. இதேபோன்ற இறப்பு நாட்டில் உள்ள பல்வேறு வன உயிரியல் பூங்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அனைத்து தகவல்களையும் வனத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி