ஆப்நகரம்

ஈஸ்டர், வீக் எண்ட் ஹாலிடே ஊருக்கு போற பிளானா? வந்தே பாரத், சூப்பர் பாஸ்ட் ரயில் ரெடி.. தெற்கு ரயில்வே சர்ப்ரைஸ்!

ஈஸ்டர் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்கள் விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் மற்றும் தாம்பரம் நாகர்கோவில் இடையே சூப்பர் பாஸ்ட் ரயில்களும் இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Authored byரம்யா. S | Samayam Tamil 28 Mar 2024, 12:54 pm
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் வெளியூரில் வேலை மற்றும் படிப்பு நிமித்தமாக தங்கி இருக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர் செல்வது வழக்கம். இதுபோன்ற நேரங்களில் அதிகளவிலான கூட்ட நெரிசல் பொது போக்குவரத்தில் இருக்கும். இதனை சமாளிக்கும் வகையிலும், மக்கள் சிரமம் இன்றி செல்லும் வகையிலும் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
Samayam Tamil vande bharat special trains operate between chennai egmore and nagercoil on easter and weekend holidays
ஈஸ்டர், வீக் எண்ட் ஹாலிடே ஊருக்கு போற பிளானா? வந்தே பாரத், சூப்பர் பாஸ்ட் ரயில் ரெடி.. தெற்கு ரயில்வே சர்ப்ரைஸ்!


​சொந்த ஊர் செல்லும் மக்கள்

விடுமுறை மற்றும் பண்டிகை காலம் வர தொடங்குவதற்கு சில நாட்கள் முன்னரே இதற்கான அறிவிப்புகள் துறை சார்ந்து வெளியிடப்படும். அப்போது மக்கள் தங்கள் பயணங்களை எளிதில் திட்டமிட்டு கொள்வார்கள். தற்போது ஈஸ்டர் மற்றும் வார இறுதி நாள் விடுமுறை வர உள்ளதால் சென்னை போன்ற நகரங்களில் இருக்கும் மக்கள் இந்த விடுமுறையை பயன்படுத்தி சொந்த ஊர் செல்ல ஆயுத்தமாகி உள்ளனர்.

​சிறப்பு பேருந்துகள்

இதனை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

​ஈஸ்டர், வார இறுதி நாட்கள்

இந்த நிலையில் ஈஸ்டர் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்கள் விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டுக்கு சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

​வந்தே பாரத் சிறப்பு ரயில்

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை எழும்பூரில் இருந்து, நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (வண்டி எண் 06057), வரும் 30, 31 ஆம் தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

நின்று செல்லும் ரயில் நிலையங்கள்

மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து அதே தேதிகளில் மதியம் 2.10 மணிக்கு புறப்பட்டு சென்னை- எழும்பூர் வரும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06058) அதே நாளில் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மார்க்கங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும்.

​சூப்பர் பாஸ்ட் ரயில்

இது போல் ஈஸ்டரை முன்னிட்டு தாம்பரம் - நாகர்கோவில் இடையே சூப்பர் பாஸ்ட் ரயில்களும் இயக்கப்படுகின்றன. தாம்பரம் டூ நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (வண்டி எண் 06041) தாம்பரத்தில் இருந்து வரும் 29 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் நாகர்கோவிலை அடுத்த நாள் காலை 7.10 மணிக்கு சென்றடையும்.



அது போல் நாகர்கோவில் - தாம்பரம் சூப்பர் பாஸ்ட் (வண்டி எண் 06042) நாகர்கோவிலிலிருந்து வரும் 30ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு புறப்படும். அடுத்த நாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
ரம்யா. S
நான் ரம்யா தமிழ் இலக்கியம் கற்றுள்ளேன். ஊடகம் மீதான ஆர்வத்தால் இதழியல் துறையை தேர்ந்தெடுத்தேன். இரண்டு வருடம் பத்திரிகை துறையில் அனுபவம் உள்ளது. ஊடகம் சார்ந்த எனது பார்வையை விரிவுபடுத்தி அதில் அனுபவம் பெரும் நோக்கோடு தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் டிஜிட்டல் ஊடகத்தில் இணைந்துள்ளேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி