ஆப்நகரம்

சென்னையை நோக்கி வருகிறது வர்தா 2.0: பீதியில் பொதுமக்கள்!

வங்காள விரிகுடா கடலின் தென்மேற்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் புயலாக மாறி சென்னையைத் தாக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

TNN 29 Nov 2017, 1:19 pm
சென்னை: வங்காள விரிகுடா கடலின் தென்மேற்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் புயலாக மாறி சென்னையைத் தாக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil vardah like heavy storm is expected to attack chennai in one week time
சென்னையை நோக்கி வருகிறது வர்தா 2.0: பீதியில் பொதுமக்கள்!


தமிழகத்தின் ஆண்டுதோறும் வடக்கிழக்குப் பருவமழை பொழிவது வழக்கம். சீரற்ற முறையில் பருவமழை பெய்வதால் கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில், தற்போது வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் காரணமாக, டிசம்பர் முதல் வாரத்தில் சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும் வர்தா போன்ற ஒரு புயல் தாக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் பெரிதாகி சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்களைக் கடந்து செல்ல வாய்ப்புள்ளதாக புயல் உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழக்கவும் அல்லது வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திராவின் தெற்கு பகுதியைத் தாக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து வங்களா விரிகுடாவில் உருவாகும் 4வது காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி