ஆப்நகரம்

மெயின் ரோட்டில் நடக்கும் பலே திருட்டு.. வெளியான ஷாக் வீடியோ.. தாம்பரத்தில் பரபரப்பு!

தாம்பரம் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ள லாரிகளில் இருந்து டீசல் திருடும் கும்பலின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 5 Jul 2022, 1:03 pm
தாம்பரம் அருகே லாரிகளில் டீசல் திருடும் கும்பலின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil லாரிகளில் டீசல் திருடும் கும்பலின் வீடியோ


தாம்பரம் அடுத்த வண்டலூர் வரதராஜபுரம் வெளிவட்ட சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடி அருகே பழைய பொருட்களை வாங்கும் கடைகள் அமைந்துள்ளது. பழைய பொருட்கள் வாங்கும் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் வெளிவட்ட சாலையில் நிறுத்தப்படும் லாரிகளில் இருந்து டீசல்களை திருடும் வீடியோ வெளியாகி உள்ளது.

Marina beach: மெரினாவில் போட்டோகிராபரை தாக்கிய சில்வண்டுகள்.. 2 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ்!

லாரிகளில் இருந்து 25 லிட்டர் தண்ணீர் கேனில் டீசலை திருடி கடைக்கு கொண்டு செல்லும் இந்த கும்பல், உடனடியாக சிறிய வகை வாகனத்திற்கு விற்பனை செய்கின்றனர்.

இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர். இது போன்று வெளிவட்ட சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி