ஆப்நகரம்

பாஜகவினருக்கு ஸ்பெஷல் கிப்ட்; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பிரதமர் நரேந்திர மோதி சென்னை வருகையை முன்னிட்டு பாஜக தொண்டர்களுக்கு காவி தலைப்பாகை பரிசாக வழங்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 28 May 2022, 9:16 am
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க ஒரு நாள் பயணமாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்திருந்தார். மத்திய அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்ட ஐந்து நலத்திட்டங்களை ஒவ்வொன்றாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
Samayam Tamil tamil nadu bjp


1. ரூ.500 கோடி மதிப்பீட்டில் மதுரை - தேனி இடையேயான அகல ரயில் பாதை திட்டம்

2. ரூ.590 கோடி மதிப்பீட்டில் சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் பாதை திட்டம்

3.ரூ.116 கோடி மதிப்பீட்டில் பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 1,152 வீடுக பயனாளிகளிடம் ஒப்படைப்பு

4 ரூ.910 கோடி மதிப்பீட்டில் எண்ணூர் - செங்கல்பட்டு பிரிவு மற்றும் 271 கிலோ மீட்டர் திருவள்ளூர் - பெங்களுரூ இயற்கை எரிவாயு குழாய் திட்டம்

5. சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட விரைவுப் பாலம் உள்ளிட்ட 11 திட்டங்களை தொடங்கி வைத்தார்.

முன்னதாக பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையம் முதல் நேரு உள் விளையாட்டு அரங்கம் வரை திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் நரேந்திர மோடி வாழ்க, பாரத் மாதா கி ஜே உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். பாஜகவினருக்கு எதிராக திமுகவினர் பலரும் அவர்களது கட்சிக் கொடியை கையில் ஏந்தியவாறு சாலையோரங்களில் காத்திருந்தனர்.

பிரதமர் மோடியை வரவேற்க திரண்டிருந்த தொண்டர்களுக்கு பாஜக சார்பில் மோர், ஜூஸ் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. அதேபோல், காவி நிறத்தில் வட இந்தியர்கள் அணியும் டர்பன் எனப்படும் தலைப்பாகை பரிசாக வழங்கப்பட்டது. இதற்காக வட இந்தியர்கள் இருவர் சாலையோரத்தில் நின்று உடனடியாக டர்பன் தயாரித்து விநியோகம் செய்த காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி