ஆப்நகரம்

கிளாம்பாக்கம் என்னாச்சு? தீபாவளி வந்தாச்சு... குட்பை சொல்ல ரெடியான சென்னை!

கோயம்பேட்டிற்கு குட்பை சொல்வதற்கு தயாராகி வரும் சென்னைவாசிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது ரெடியாகும் என்ற கேள்வியை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

Samayam Tamil 2 Oct 2022, 1:29 pm
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணிகள், கடந்த அதிமுக ஆட்சியிலேயே தொடங்கப்பட்டது. இதற்காக வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு 393.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் கொரோனா நெருக்கடியால் பணிகள் தாமதமானது. தற்போது நிலைமை சீரடைந்து இயல்பு சீரடைந்துள்ளது.
Samayam Tamil what is the latest status of kilambakkam new bus stand construction and opening date
கிளாம்பாக்கம் என்னாச்சு? தீபாவளி வந்தாச்சு... குட்பை சொல்ல ரெடியான சென்னை!


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

இதையொட்டி பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் தீபாவளிக்கு ரெடியாகி விடும் என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு இன்னும் 22 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் ரெடியாகி விட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரிக்கையில், 90 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

டிசம்பரில் திறப்பு விழா

அடுத்தகட்டமாக வண்ணப் பூச்சு, மின்சார வசதி, குடிநீர் வசதி, அலங்கார வசதிகள் என மெருகேற்றும் வேலைகள் எஞ்சியிருப்பதாக தெரிகிறது. இந்தப் பணிகளை முடிக்க மேலும் சில வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒட்டுமொத்தமாக பணிகள் முடிவடைய, எப்படியும் டிசம்பர் மாத இறுதி வரை ஆகிவிடும் எனக் கூறுகின்றனர். இங்கிருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.


பிளாட்ஃபார்ம் டிக்கெட்... கொஞ்ச நாளைக்கு ரயில்வே ஸ்டேஷன் பக்கம் போயிடாதீங்க மக்களே!

நகரப் பேருந்து வசதி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொதுமக்கள் எளிதில் அடையும் வகையில் சாதாரண கட்டண பேருந்துகளை அதிக அளவில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விரைவு பேருந்துகளில் கிளாம்பாக்கம் செல்வதற்கான கட்டணத்தை கட்டுபடியாகக் கூடிய வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சூரிய மின் வசதி

இதையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் மேற்புறம் சூரிய மின் தகடுகள் பொருத்தி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சார வசதியை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள், மழைநீர் சேகரிப்பு திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த சி.எம்.டி.ஏ முடிவு செய்திருக்கிறது.

வண்டலூருக்கு ஸ்கை வாக்

இதுதொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்து SEIAA எனப்படும் மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் சமர்பிக்கவுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்த பின்னர் வேலைகள் தொடங்கப்படும். இந்நிலையில் வண்டலூர் ரயில் நிலையம் வரை செல்லும் வகையில் ஸ்கை வாக் பாலம் அமைக்க ஆராயப்பட்டு வருகிறது. இதற்காக வண்டலூரில் கூடுதலாக ஒரு பிளாட்பாரம் கட்டுவதற்கு இந்திய ரயில்வே ஆய்வு செய்து வருகிறது.


"குழந்தை மேயர் பாவம்" ஜெயகுமார் விமர்சனம்!

மெட்ரோ சேவை

இதன்மூலம் புறநகர் ரயிலில் பொதுமக்கள் எளிதில் பயணம் செய்ய முடியும். அடுத்தகட்டமாக கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் வசதி கொண்டு வரப்படவுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை ஒரு வழித்தடமும், சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட உடன் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி