ஆப்நகரம்

விஜய் இயக்கத்தில் சண்டை சென்னையில் குவிந்த தலைவர்கள்: தீருமா பிரச்சினை!

தற்போதைய அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளராக இருக்கும் குஷி ஆனந்த் மீது தவறான புகார் கூறும் முன்னாள் தலைவர் ஜெயசீலன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் பேட்டி அளித்துள்ளனர்.

Samayam Tamil 11 Feb 2021, 8:59 pm
சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்த பின் தளபதி விஜய் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
Samayam Tamil விஜய் இயக்கத்தில் சண்டை சென்னையில் குவிந்த தலைவர்கள்: தீருமா பிரச்சினை!

2011ஆம் ஆண்டு தளபதி விஜய் அவர்களால் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் தலைவர் ஜெயசீலன் தற்போது தங்களது இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக தற்போதைய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் விதத்தில் வதந்திகளைப் பரப்பி வருகிறார்.

புஸ்ஸி ஆனந்த் பணத்தைப் பெற்றுக் கொண்டு இயக்கத்தில் பதவி கொடுக்கிறார் என்ற பொய்யான தகவலைக் கூறி வருகிறார். தற்போதைய காலகட்டத்தில் சினிமா டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய் கொடுத்து யார் வாங்குவார்கள். டிக்கெட்டில் கூட வியாபாரம் செய்வதாகக் குற்றச்சாட்டை ஜெயசீலன் பரப்பி வருகிறார்.

தற்போதைய செயலாளர் மிகவும் நேர்மையாகச் செயல்படக் கூடியவர். ஆட்டோ ஓட்டுநர், பூ வியாபாரிகள் போன்ற வசதி இல்லாத தங்களை மாவட்டச் செயலாளர்களாக உருவாக்கி உள்ளார்.

இதுக்கு மேல பொறுக்க முடியாது... காட்டுப்பள்ளி போராட்டக்களத்திலிருந்து

புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இயக்கம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்திற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஜெயசீலன் மீது அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லை என்றால் அடுத்த கட்டமாக ஜெயசீலன் இல்லத்தில் முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் மக்கள் இயக்கம் போராட்டம் நடத்தப்படும். ஜெயசீலன் உடனடியாக இதற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ பதிவு பதிவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி