ஆப்நகரம்

காதலர்களின் கூடாரம் மெரினா திறப்பு எப்போது?

ஊரடங்கால் மூடப்பட்ட மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்களை அனுமதிப்பது குறித்து பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 29 Sep 2020, 3:49 pm
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. பொது மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அந்த வகையில், சென்னையின் முக்கிய அடையாளமாக திகழும் மெரினா கடற்கரையும் பொது மக்கள் அனுமதியின்றி மூடப்பட்டது.
Samayam Tamil மெரினா கடற்கரை
மெரினா கடற்கரை


இதனிடையே, இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கம் வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் அன்லாக் செயல்முறையின்படி பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து, இ-பாஸ் ரத்து உள்ளிட்டவைகள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ஆனாலும், சில பணிகளுக்கு தளர்வுகள் அளிக்கப்படவில்லை.

அந்த வகையில், காதலர்களின் கூடாரமாக விளங்கும் மெரினா கடற்கடரைக்கு பொது மக்கள் செல்ல அனுமதியின்று வெறிச்சோடி காணப்படுகிறது. அங்கு கடைகள் போட்டு பிழைப்பு நடத்தும் வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, மெரினா கடற்கரை எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி சென்னை வாசிகளிடம் பரவலாக இருக்கிறது.

வந்தாரை வாழ வைக்கும் சிங்கார சென்னைக்கு இது அழகா..!

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு ஒன்றின் போது, ஊரடங்கால் மூடப்பட்ட மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்களை அனுமதிப்பது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி அக்டோபர் 5ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் கோரியது குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி