ஆப்நகரம்

கோயம்பேடு மார்கெட் திறப்பு: அரசு எடுக்கும் நடவடிக்கை!

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் அங்கு ஆய்வு நடைபெறுகிறது.

Samayam Tamil 26 Aug 2020, 12:30 pm
கொரோனா பரவல் சென்னையில் அதிகரித்த போது அதன் ஹாட் ஸ்பாட்டாக கோயம்பேடு விளங்கியது.
Samayam Tamil koyembedu


வியாபாரிகள், தொழிலாளிகள், காய்கறி வாங்கச் சென்றோர் ஆகியோருக்கு கொரோனா பரவியது. அங்கு பணியாற்றிய தொழிலாளிகள், லாரி டிரைவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிய நிலையில் அங்கும் கொரோனா பரவியது. கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கொரோனா பரவ காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தை விளங்கியதன் விளைவாகவே அது மூடப்பட்டது.

வியாபாரிகள் பாதுகாப்பு வழுமுறைகளை சரியாக பின்பற்றாததே கொரோனா பரவலுக்கு காரணம் என அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஊரடங்குக்குள் ஊரடங்கு என நான்கு நாள்கள் சென்னையில் மட்டும் முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக அறிவித்தபோது மக்கள் காய்கறிகளை வாங்க ஒரே நேரத்தில் கோயம்பேட்டுக்கு படையெடுத்தனர். அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கியது அதனாலே அதிக கூட்டம் வந்தது என வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு: தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வ முடிவு!

அதன்பின்னர் கோயம்பேடு காய்கறி சந்தை மாதவரத்திற்கும் திருமழிசைக்கும் மாற்றப்பட்டது. நகருக்கு வெளியே உள்ள திருமழிசையில் மொத்த வியாபாரிகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் டன் கணக்கில் காய்கறிகள் வீணாவதாக கண்ணீர் வடிக்கின்றனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு வழங்கி அதை திறந்து வருமானம் பார்க்கும் அரசு காய்கறி சந்தையைத் திறக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கொரோனா பரவிய இடங்கள் கிருமி நாசினி தெளித்து மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் முதல் தலைமைச் செயலகம் வரை மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் ஏன் கோயம்பேடு காய்கறி சந்தையை அரசு திறக்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

வணிகர் சங்கம் சார்பாக தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டது. வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இ பாஸ் ரத்து? கலெக்டர்களை அழைத்த முதல்வர்!

இந்நிலையில் இன்று கோயம்பேடு காய்கறி சந்தையில் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கோயம்பேடு அங்காடி குழு முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜு உள்ளிட்ட அதிகாரிகளும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் விரைவில் கோயம்பேடு காய்கறி சந்தை திறப்பு குறித்து அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி