ஆப்நகரம்

சென்னை மாநகரை விழுங்கவுள்ளதா வங்கக்கடல்? இதோ ஆய்வு முடிவுகள்

2100-ம் ஆண்டில் சென்னை அடையார் முதல் திருவான்மியூர் வரை வங்கக் கடல் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்ந்து 35 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஆக்கிரமிக்கும் என ஐக்கிய அரபு பல்கலையும் அண்ணா பல்கலையும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 22 Apr 2019, 1:56 pm
2100-ம் ஆண்டில் சென்னை அடையார் முதல் திருவான்மியூர் வரை வங்கக் கடல் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்ந்து 35 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஆக்கிரமிக்கும் என ஐக்கிய அரபு பல்கலையும் அண்ணா பல்கலையும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil merina beach sea chennai


இந்த ஆய்வில் பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆறு, முட்டுக்காடு ஆகிய இடங்கள் சோதனை இடப்பட்டன. இந்த ஆய்வுக்காக 30 இடங்களில் போர் துளை இடப்பட்டது. இதன்மூலம் கடல்மட்டம் எவ்வளவு உயரத்துக்கு அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டது.

குளோபல் வார்மிங் காரணமாக இமயமலை பனிப்பாறைகள் உருகி வருகின்றனர். இதனால் கடல்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் 3.6 மில்லி மீட்டர் அளவு வங்கக்கடல் உயர்ந்துள்ளது. மற்ற கடல்களைவிட வங்கக் கடல் மட்டம் வேகமாக உயர்கிறதாம்.

இந்த ஆய்வின்படி ஆண்டுக்கு 2 மில்லி மீட்டர் என்ற அளவில் வங்கக் கடல் மட்டம் உயரும் எனத் தெரியவந்துள்ளது. இதற்காக கடல் அலையில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச உயரம் கணக்கிடப்பட்டது. கடல் சென்னை நகரத்துக்குள் வர வர, நிலத்தடி நீருடன் கலக்கும். இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

மனிதர்களில் அலட்சியத்தால் கடல் மட்டம் இவ்வாறாக வேகமாக உயர்கிறது. ஆனால் இதற்கு நீண்டகாலம் ஆகும் என்பதால் தற்போது பயப்படத் தேவை இல்லை. ஏற்பனவே உலகின் பல இடங்களில் சிறு தீவுகள் கடலில் மூழ்கிவருகின்றன. இயற்கைக்கு முன்னால் மனித சக்தி ஒன்றுமே இல்லை என்பதை இந்த ஆய்வு உறுதிபடுத்துகிறது.

அடுத்த செய்தி