ஆப்நகரம்

ஈவ் டீசரை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்த இளம்பெண்

சினிமா காட்சியை போன்று ஈவ் டீசிங் செய்த வாலிபரை விரட்டி பிடித்த இளம் பெண் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

TNN 7 May 2017, 11:33 am
சென்னை: சினிமா காட்சியை போன்று ஈவ் டீசிங் செய்த வாலிபரை விரட்டி பிடித்த இளம் பெண் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
Samayam Tamil woman chases nabs eve teaser on road hands him to cops
ஈவ் டீசரை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்த இளம்பெண்


கேரளாவைச் சேர்ந்த ஸ்ருதி ரஞ்சித் எனும் இளம்பெண், கடந்த வெள்ளிக்கிழமை மாலை தையூர் மார்க்கெட் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கிருந்த வாலிபர் ஸ்ருதியை வித்யாசமான குரல்களில் கூப்பிட்டு சீண்டியுள்ளார். அதனை கண்டுக்கொள்ளாத ஸ்ருதியை, வாலிபர் ஆபாச வார்த்தைகளால் அழைத்துவிட்டு ஓடியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஸ்ருதி அந்த வாலிபரை துரத்தி பிடிக்க முயன்றதை பார்த்த யாரும், உதவ முன்வரவில்லை.

சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலில், உயிரை பணயம் வைத்து ஈவ் டீசிங் செய்த வாலிபரை ஸ்ருதி துரத்தியுள்ளார். விடாமல் துரத்தி வந்த ஸ்ருதியிடம் இருந்து தப்பிக்க வாலிபர் சுவர் ஏறி குதிக்க முயற்சித்துள்ளார். சற்றும் யோசிக்காமல் ஸ்ருதியும் சுவர் ஏறி குதித்து, வாலிபரை மடக்கி பிடித்துள்ளார். ஈவ் டீசிங் செய்த வாலிபரின் காலரை பிடித்து தரதரவென ஸ்ருதி இழுத்துவருவதை பார்த்த பொதுமக்கள் அவரை அடித்து துவைத்து பின்னர் மேடவாக்கம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

ஸ்ருதி விரட்டி பிடித்த வாலிபர் மணி(25), திருச்சியைச் சேர்ந்தவர் என்றும், இங்கு ஓட்டுநராக பணிபுரிந்து வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஸ்ருதி அளித்த புகாரின் அடிப்படையில் மணி மீது ஈவ் டீசிங் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

In a scene straight out of a film, a woman chased and caught a man after he teased her while she was at the market on Friday evening. Police said Shruthi Ranjith, 27, a resident of Mahalakshmi Avenue and a native of Kerala, was at the Thaiyur market when the man passed lewd remarks at her.

அடுத்த செய்தி