ஆப்நகரம்

கடலலையில் மாயமான ஐந்து பேர்...பண்டிகை நாளில் இப்படியொரு சோகம்

கடலலையில் சிக்கி நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் மாயமான சம்பவம் வடசென்னை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Nov 2020, 10:28 am
சென்னை, வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவைச் சேர்ந்த செளந்தரராஜன் என்பவரின் மகன் அருள்ராஜ் (19), மகள் துர்கா (14). இருவரும் வெளியூரில் தங்கி படித்து வந்துள்ளனர். தீபாவளி பண்டிகையை பெற்றோருடன் கொண்டாட சில தினங்களுக்கு முன் இருவரும் சென்னைக்கு வந்துள்ளனர்.
Samayam Tamil கோப்பு படம்
கடலலையில் மாயமான சிறுவர்கள்


அருள்ராஜ், துர்கா ஆகிய இருவரும், தங்களது நண்பர்களான மார்டின்(13), மார்க்ரேட் (13), விஷ்ணு (14) ஆகியோருடன் நேற்று மாலை புது வண்ணாரப்பேட்டை, செரியன் நகர் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்களுடன் பெற்றோரும் கடற்கரைக்கு போயுள்ளனர்.

சிறுவர், சிறுமியர் கடற்கரையில் விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வந்த ராட்சத அலை அருள்ராஜ், விஷ்ணு, துர்கா உள்ளிட்ட ஐந்து பேரையும் இழுத்து சென்றது. பதறிப்போன பெற்றோர், மீனவர்களின் உதவியுடன் படகில் சென்று தங்களது பிள்ளைகளை தீவிரமாக தேடினர்.

கேட்டதும் தீபாவளி டிரஸ் வாங்கி தராத அப்பா...மகன் எடுத்த விபரீத முடிவு!

இதில் அருள்ராஜ் மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு போகும் வழியில் பரிதாபமாக இறந்தார். அருள்ராஜை தவிர்த்து நான்கு பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகையின்போது சிறுவர்கள் கடலலையில் மாயமான சம்பவம் வடசென்னை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி