ஆப்நகரம்

போலீஸ் ஹெல்பருக்கு புதிதாகக் கோவையில் அறை திறப்பு!

கோவையில் மூன்றாம் கண் எனச் சொல்லப்படுகிற கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் திறந்து வைத்தார்.

Samayam Tamil 13 Jan 2021, 9:29 pm
குற்றச் செயல்களைத் தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளைக் கோவை மாநகர காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.
Samayam Tamil போலீஸ் ஹெல்பருக்கு புதிதாகக் கோவையில் அறை திறப்பு!
போலீஸ் ஹெல்பருக்கு புதிதாகக் கோவையில் அறை திறப்பு!


இதன் ஒருபகுதியாக மாநகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகக் கோவை பந்தயச் சாலை எல்லைக்குட்பட்ட உப்பிளிபாளையம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இப்பணிகள் அனைத்தும் முடிவடைந்து கேமராக்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் நிகழ்ச்சி கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பல்சமய நல்லுறவு குழு ஒருங்கிணைப்பாளர் எம். எம் ராமசாமிக்குக் காவல் ஆணையர் நினைவுப் பரிசு வழங்கினார்.

கொரோனா மருந்து எவ்வளவு, முதலில் யாருக்கெல்லாம்..?

இந்த நிகழ்வில் துணை ஆணையர்கள் ஸ்டாலின் மற்றும் உமா ,குணசேகரன் உள்படக் காவல் உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் போலீசார் உள்படப் பலர் பங்கேற்றனர். பந்தயச் சாலை காவல் ஆய்வாளர் சக்திவேல் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

அடுத்த செய்தி