ஆப்நகரம்

கோவையில் போலி மருத்துவர்கள் கைது!

மருத்துவம் படித்து பட்டம் பெறாமல் கிராமப்புற பகுதிகளில் மருத்துவமனை நடத்திவந்த போலி மருத்துவர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

TNN 14 Jul 2017, 8:58 pm
கோவை : கிராம பகுதியில் எம்பிபிஎஸ் படிக்காமல் மருத்துவமனை நடத்திவந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil 2 quacks held drugs x ray machine seized
கோவையில் போலி மருத்துவர்கள் கைது!


மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை துறையின் இணை இயக்குநர் எஸ்.கண்ணன் தலைமையிலான குழு தொண்டாமுத்தூர் மற்றும் ஆலாந்துறையில் திடீர் சோதனையில் ஈடுபட்டது. முதலில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள உலியம்பாளையத்தில் செயல்பட்டு வந்த கலைவாணி மருத்துவமனையில் திடீர் சோதனைனயில் ஈடுபட்டனர். குளத்துபாளையத்தை சேர்ந்த கருணாகரன் என்பவரின் மனைவி கலைவாணி இந்த மருத்துவமனையை நடத்திவந்தார். சமூக மருத்துவ சேவை பிரிவில் பட்டயம் பெற்ற கலைவாணி பொது மருத்துவர் என்ற பெயரில் இந்த மருத்துவமனையை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து அவர் பயன்படுத்தி வந்த எக்ஸ் ரே மெஷின் மற்றும் மருந்துகளை பறிமுதல் செய்து கலைவாணியை தொண்டாமுத்தூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

அடுத்ததாக ஆலாந்துறை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே ஆறுமுகராஜ் என்பவர் நடத்திவந்த மருத்துவமனையில் சோதனை நடத்தினர். மருத்துவமனையில் இருந்த ஊசி மற்றும் மருந்துகளை பறிமுதல் செய்து ஆறுமுகராஜை ஆலாந்துறை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து இரண்டு மருத்துவமனைகளையும் மூடிய எஸ்.கண்ணன், இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார். மேலும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் கண்காணிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

அடுத்த செய்தி