ஆப்நகரம்

சூறைக்காற்றால் வீடுகளின் மீது விழுந்த புளியமரம்... 3 பேர் படுகாயம்!

கோவையில் அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக புளியமரம் வேருடன் வீடுகள் மீது விழுந்ததில் 4 வீடுகள் சேதமடைந்தன. இதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 10 May 2022, 5:09 pm
கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட செல்வ விநாயகர் நகர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
Samayam Tamil மரம் விழுந்ததில் காயம் அடைந்த நபர்


இவர்கள் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் பலத்த காற்று வீசியுள்ளது. இதில் அந்த பகுதியில் இருந்த சுமார் 50 வருடங்களுக்கு மேலான புளிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்து அருகில் இருந்த 4 வீடுகளின் மேல் விழுந்துள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதில் வீடுகள் பலத்த சேதமடைந்தன. மேலும் அருகில் சென்ற உயர் அழுத்த மின்சார கம்பத்திலும் மரம் விழுந்ததால் கம்பம் உடைந்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மேலும் மரம் விழுந்த வீடுகளில் தூங்கிக்கொண்டு இருந்த கூலி தொழிலாளிகள் மகேந்திரன், விமலா, ரங்கி உள்ளிட்ட 3 பேர் பலத்த காயம் அடைத்தனர். அவர்களை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அடிக்கடி செல்போன் பார்த்ததால் கண்டித்த பெற்றோர்; +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை!

இதில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. மேலும் அங்கு ஒரு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டூவிலர் மீது மின் கம்பி சாய்ந்ததில் வண்டி தீப்பிடித்து சேதம் அடைந்தது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர், பன்னிமடை ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், தடாகம் போலீசார் உள்ளிட்டோர் விரைந்து வந்து சாய்ந்த மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி