ஆப்நகரம்

திட்டி தீர்த்த மக்களுக்கு நல்லது செய்யும் கோவை “46 குழு நண்பர்கள்”: ஊரே மெச்சுகிறது!

தங்கள் செயல்களைப் பார்த்துச் சாடிய ஊர்மக்கள் மெச்சும் அளவிற்கு நற்பணி செய்து வரும் கோவை இளைஞர்களின் செயல் பலதரப்பினரிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

Samayam Tamil 11 Jun 2021, 10:08 pm
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் சமீப நாட்களாக உச்சத்தில் உள்ளது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. நகரப் பகுதிகளில் வசிக்கக்கூடிய ஆதரவற்றவர்கள் சாலையோர வசிக்கக்கூடிய உணவின்றி தவிக்கும் மக்களுக்குத் தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள் பலரும் உணவுகள் வழங்கி வருகின்றனர்.
Samayam Tamil திட்டி தீர்த்த மக்களுக்கு நல்லது செய்யும் கோவை “46 குழு நண்பர்கள்”: ஊரே மெச்சுகிறது!


நகர்ப்புறத்தில் வசிக்கும் கூடிய மக்களுக்கு உணவு எளிதில் கிடைத்தாலும் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் மக்கள் மலையோரம் வசிக்கும் மக்கள் மலைவாழ் மக்களுக்கு உணவு கிடைப்பது சவாலாகவே உள்ளது.

இச்சூழலில் கோவை ஆனைக்கட்டி, கணுவாய், மாங்கரை, வீரபாண்டி போன்ற மலையோர பகுதியில் வசிக்கக்கூடிய ஆதரவற்றவர்கள், வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனியாக இருப்பவர்கள், வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு சின்னத்தடாகம் பகுதியைச் சேர்ந்த “46 நண்பர்கள் குழு” என்ற இளைஞர்கள் அமைப்பு உணவு வழங்கி வருகிறது.

இவர்கள் நாள் ஒன்றிற்கு சுமார் ஆயிரம் பேருக்கு இரு சக்கர வாகனத்தில் நேரடியாகச் சென்று உணவு வழங்கி வருகின்றனர். இவர்களின் பணியைப் பார்த்து சின்னதடகம் ஊர் பொதுமக்களும் அரிசி மளிகை பொருட்கள் போன்றவற்றை வழங்கி உதவி புரிந்து வருகின்றன.
கோவையில் 3ஆவது அலை தொடங்கியது வாட்ஸ்-அப் செய்தியைப் பரப்பினால் ஜெயில்: அரசு எச்சரிக்கை!
இதுகுறித்து பேசிய அக்குழுவின் உறுப்பினர் ப்ரணிஷ், “இந்தக் குழுவை 2018ல் தொடக்கினோம். எங்கள் மீது மக்கள் தவறான கண்ணோட்டத்துடன் இருந்து வந்தனர். அதை மாற்ற இந்த குழுவை ஆரம்பித்து பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறோம்.

ஏராளமான பணிகளைத் தொடர்ந்து இப்போது கொரோனா காலத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம். அதுமட்டுமின்றி வைரஸ் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளைப் படிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது எங்கள் குழுவின் மூலம் பண சிரமமுள்ள மாணவர் ஒருவரைப் படிக்க வைக்கிறோம்.

இந்த குழுவினர் பணிகளைப் பார்த்து இனியா என்ற பெண் ஒருவரும் இவர்களுடன் இணைந்து சமூகப் பணிகளை ஆற்றி வருகிறார். இனியா, “என்னைப் போல் பெண்கள் பலர் இதுபோன்ற சேவைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அடுத்த செய்தி