ஆப்நகரம்

எஸ்பி வேலுமணி தலைமையில் சசிகலாவுக்கு எதிராகக் கோவையில் அதிரடி!

சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியதற்குக் கோவை மாவட்ட அதிமுக வரவேற்பு தெரிவித்து, அவரது அரசியல் நகர்வுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 20 Jun 2021, 8:47 pm
கோவை மாவட்ட அதிமுகவிற்குள் குழப்பத்தை விளைவிக்கும் விகே சசிகலாவிற்கு எதிராகக் கோவை மாவட்ட அதிமுக சார்பில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Samayam Tamil எஸ்பி வேலுமணி தலைமையில் சசிகலாவுக்கு எதிராகக் கோவையில் அதிரடி!


கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கோவை மாவட்ட அவை தலைவர் ஏ வெங்கடாசலம், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில், கோவை மாநகர மாவட்டச் செயலாளர் அம்மன் கே அர்ஜுன், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் பிஆர்ஜி அருண்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் விகே சசிகலா அரசியலிலிருந்து விலகுவதாக ஊடகங்கள் மூலம் பகிரங்கமாக அறிவித்தார். சட்டமன்ற தேர்தல் முடிவிற்குப் பின் கட்சி வலுவாக இருப்பதைப் பார்த்து, அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ளச் சிலருடன் தொலைப்பேசியில் பேசுவது போல் நாடகம் ஆடுவதாகக் குறிப்பிட்டு அதைக் கண்டிப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனுஷ் மாரி படம் ஸ்டையில் புறா பந்தயம் கோவை புளியங்குளத்தில் மிக சிறப்பு!
அதேபோல் சசிகலா சாதிய ரீதியாகப் பேசி அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். தங்களை வளப்படுத்திக் கொள்ள ஒரு குடும்பத்தினர் கட்சியை அபகரிக்க முயல்கின்றனர்.

அதிமுகவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் விகே சசிகலாவுடன் பேசியவர்களைக் கட்சியிலிருந்து நீக்கியதை, கோவை மாவட்ட அதிமுக வரவேற்கிறது. அதிமுகவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் சசிகலாவிற்கு எதிராகக் கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அடுத்த செய்தி