ஆப்நகரம்

போட்டோ கிராபருடன் சென்று பூட்டை உடைத்த போலீஸ்!

கோவை மாவட்டம் அரிசிக் கடை வீதியில் 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Dec 2020, 6:44 pm
2 டன் அரிசியைப் பறிமுதல் செய்த குடிமைப்பொருள் அதிகாரிகள், சம்பவம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரிசி பதுக்கல் ஆலைக்குச் சென்று அதிகாரிகள் நடத்திய இந்த ஆய்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil போட்டோ கிராபருடன் சென்று பூட்டை உடைத்த போலீஸ்!
போட்டோ கிராபருடன் சென்று பூட்டை உடைத்த போலீஸ்!


அரிசிக் கடை வீதியில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வைத்து உள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாகக் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைக்கப் பெற்றது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குப் பத்திரிகையாளர்களுடன் வந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு 43 மூட்டைகளில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் கடைவீதி காவல்நிலைய போலீசார் உதவியுடன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசியின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் இருக்கும் எனவும் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

கைப்பையில் கிடந்த 6 நாள் வயது பச்சிளம் குழந்தை சடலம்: கோவை போலீஸ் விசாரணை!

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 43 மூட்டைகள் லாரி மூலம் குடிமைப்பொருள் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி கள்ளத்தனமாகச் சந்தைக்கு எப்படி, இதற்கு யார் உதவி செய்தார், எந்த பகுதியிலிருந்து இந்த அரிசி கொண்டுவரப்பட்டது? உள்ளிட்ட கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி