ஆப்நகரம்

செட்டிநாடு அலுவலகத்தில் மீண்டும் ஐடி ரெய்டு: என்ன காரணம்?

வரி ஏய்ப்பு புகார்கள் காரணமாக, ஒரே நாளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 200 பேர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனைகள் காலை முதலே நடந்து வருகின்றன...

Samayam Tamil 9 Dec 2020, 2:15 pm
செட்டிநாடு குழும அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 10ற்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil மீண்டும் செட்டிநாடு அலுவலகத்தில் ஐடி ரெய்டு: என்ன காரணம்?
மீண்டும் செட்டிநாடு அலுவலகத்தில் ஐடி ரெய்டு: என்ன காரணம்?


செட்டிநாடு குழுமத்தின் கீழ் உள்ள அலுவலகங்கள் பெருமளவில் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு நிலவி வந்தது. இது தொடர்பாகப் புகார்களும் பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள சூழலில் அதிரடி நடவடிக்கையை அரசு எப்போது எடுக்கும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த சூழலில் வரி ஏய்ப்பு புகாரின் பேரில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் தமிழ்நாடு, ஹைதராபாத் உள்ளிட்ட 5ற்கும் மேற்பட்ட மாநிலங்களில் செட்டிநாடு குழுமத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகக் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள செட்டிநாடு பிரைவேட் லிமிடெட் அலுவலகத்திற்குக் காலை 8 மணிக்கு சுமார் 15 வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அலுவலகத்திற்குள் சென்ற அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

படக்காட்சிகளைப் போல், ரூ. 2 லட்சம் லஞ்சப் பணத்தோடு கைதான அதிகாரி!

உள்ளே சென்ற அதிகாரிகள் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரின் செல்போன்களை பறிமுதல் செய்து ஆவணங்களைப் பரிசோதித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த அதிரடி சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட செட்டிநாடு குழுமத்திற்கு சுமார் ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. கோவையில் இப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் செட்டிநாடு அலுவலகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டும் சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 5 ஆண்டுகளில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.

அடுத்த செய்தி