ஆப்நகரம்

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் புதிய பெண்கள் விடுதி திறப்பு..!

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பெண்கள் விடுதியை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார்.

TNN 17 Apr 2017, 9:25 pm
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பெண்கள் விடுதியை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார்.
Samayam Tamil bharathiar university new ladies hostel opened
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் புதிய பெண்கள் விடுதி திறப்பு..!


இந்த திறப்பு விழாவில் அவர் டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார். டெல்லியில் மனித வள மேம்பாட்டுத்துறை தொடர்பான பாரதியார் பல்கலைகழக பெண்கள் விடுதி உட்பட , 17 மாநிலங்களின் 30 திட்டங்களை நேற்று அவர் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 17 மாநிலங்களின் உயர்கல்வித்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விடுதிக்கு “வாசுகி பெண்கள் விடுதி” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த விடுதி 5.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 2.5 கோடி ரூபாய் நிதி ஆர்.யு.எஸ்.ஏ திட்டத்தின் கீழ் பங்களிப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைகழகத்தில் உள்ள 9 விடுதிகளில் 1,776 மாணவ,மாணவிகள் தங்க முடியும். இவற்றில் 4 விடுதிகள் மாணவர்களுக்கானது. சமீபத்தில் 8 கோடி ரூபாய் செலவில் 240 மாணவர்கள் தங்கக் கூடிய ஆண்கள் விடுதி கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் ஆர்.யு.எஸ்.ஏ திட்டத்திற்கான பிரத்யேக இணையதளம் மற்றும் மொபைல் அப்ளிகேசன் ஆகியவற்றை ஜவடேகர் துவங்கி வைத்தார். ”இந்த இணையதளம் இந்தியாவில் உள்ள அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும் நடைபெறும் ஆராய்ச்சிகளை கண்காணிக்க உதவும். இதனை மாணவர்கள், ஆசிரியர்கள் என இரு தரப்பினரும் பயன்படுத்த முடியும். மேலும் இதன் மூலம் ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அளவு, அதில் செலவிடப்பட்ட தொகை,ஆராய்ச்சியின் நிலை ஆகியவற்றை எங்களால் அறிந்து கொள்ள முடியும்.” என பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Bharathiar University new ladies hostel opened

அடுத்த செய்தி