ஆப்நகரம்

எம்எல்ஏக்கள் உள்பட சாப்பிட்டு போராட்டம் நடத்திய 520 அதிமுகவின் மீது 3 பிரிவுகளில் வழக்கு!

கோவை சுகுனாபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது சட்ட விதிகளை மீறியதாக அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 520 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Aug 2021, 8:56 pm
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள், பினாமிகள் உள்ளிட்டோர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
Samayam Tamil எம்எல்ஏக்கள் உள்பட சாப்பிட்டு போராட்டம் நடத்திய 520 அதிமுகவின் மீது 3 பிரிவுகளில் வழக்கு!


இந்த சோதனையானது எஸ்பி வேலுமணியின் கோவை குனியமுத்தூர் வீட்டு வாசலில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அதேபோல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அப்பகுதிக்கு வந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற சோதனையைத் தடுத்த நிறுத்த அங்குக் கூடிய தொண்டர்கள் கோஷமிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மருத்துவமனையில் சந்திர பிரகாஷ் அனுமதி: 2ஆவது நாளாக ரெய்டு தொடர்கிறது!
இந்த நிலையில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதாக அதிமுக எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜூனன், முன்னாள் அதிமுக அமைச்சர் தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 520 பேர் மீது, அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, கொரோனா பேரிடர் காலத்தில் கூடுவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி