ஆப்நகரம்

மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு என்ன நடக்கிறது..?

கோவையில் நடப்பாண்டில் 192 பேர் குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உரியப் பயிற்சி வழங்கப்பட்ட பின் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 10 Dec 2020, 5:23 pm
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை திட்டத்தின் கீழ் கண்டறியப்படும் குழந்தைகள் சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுக் குறுகிய நீண்ட கால பயிற்சிகள் மூலம் அவர்களின் கல்வித் திறன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் வெள்ளலூர், சுந்தராபுரம், கோவைபுதூர், ஆனைமலை, நெகமம், தொண்டாமுத்தூர் உட்பட 15 இடங்களில் சிறப்புப் பள்ளிகள் செயல்படுகின்றன.
Samayam Tamil மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு என்ன நடக்கிறது..?
மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு என்ன நடக்கிறது..?


தொழிற்சாலைகள், செங்கச் சூளைகள், விவசாய பண்ணைகள் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றிய பல குழந்தைகள் மீட்கப்பட்டுக் குறிப்பிட்ட சிறப்புப் பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின் வழக்கமான பள்ளிகளில் சேர்க்கப்பட்டு கல்வி காலம் முடியும் வரை பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

அதன்படி நடப்பாண்டில் 192 குழந்தைகள் உரியப் பயிற்சி பெற்று முடித்துள்ளனர். பயிற்சி முடிக்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட குழந்தைகள் அவரவர் வீடுகளுக்கு அருகில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

தனியார் மயமாக்கப்பட்டதா ஊட்டி மலை ரயில்? தெற்கு ரயில்வே விளக்கம்!

இதுகுறித்து தேசிய குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்டம் மாவட்ட இயக்குநர் விஜயகுமார் கூறுகையில், “குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு 2 ஆண்டு பயிற்சி முடித்த 192 குழந்தைகளை வழக்கமான பள்ளிகளில் சேர்க்கப் பரிந்துரைத்துள்ளோம்.

இதன் காரணமாக இதுவரை நூறு பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்ப்பதற்காக பணிகள் நடந்து வருகின்றன. மேற்பட்ட குழந்தைகள் மீண்டும் குழந்தை தொழிலாளர்களாக மாறாமல் இருக்க முழுமையாகக் கண்காணித்து வருகிறோம்” என்றார்.

அடுத்த செய்தி