ஆப்நகரம்

ஜனவரி முதல் மீட்டர் கட்டண முறை கோவையில் அறிமுகம்!

வரும் ஜனவரி மாதம் முதல் மீட்டர் கட்டண முறை கோவையில் அமல்படுத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

TNN 28 Oct 2017, 9:38 pm
கோவை: வரும் ஜனவரி மாதம் முதல் மீட்டர் கட்டண முறை கோவையில் அமல்படுத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Samayam Tamil coimbatore auto rickshaws have set a new price which will be active from january
ஜனவரி முதல் மீட்டர் கட்டண முறை கோவையில் அறிமுகம்!


இதன்படி, முதல் ஒரு கிலோமீட்டருக்கு 30 ரூபாயும் அடுத்த கிலோமீட்டரிலிருந்து 15 ரூபாயும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சரியான கட்டணம் நிர்ணயம் செய்வதில் காலதாமதம் செய்ததால், தனியார் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலித்து மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கி வருவதாக தொழிற்சங்க அமைப்பினர் குற்றம் சாட்டினர்.

மேலும், இந்த புதிய கட்டண முறைக்கு அரசு அனுமதி வழங்கினாலும், வழங்காவிட்டலும் இந்தப் புதியக் கட்டண முறைப்படிதான் ஆட்டோக்கள் வரும் ஜனவரி முதல் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coimbatore Auto Rickshaws have set a new price which will be active from January.

அடுத்த செய்தி