ஆப்நகரம்

புகார் கொடுக்க வந்தவரை அலையவிட்ட சப் இன்ஸ்பெக்டர்... கமிஷ்னர் போட்ட அதிரடி உத்தரவு!

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த நபரை அலைக்கழித்து, அலட்சியப்படுத்திய விவகாரத்தில் உதவி ஆய்வாளரை, கமிஷ்னர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 30 Jun 2022, 10:15 am

ஹைலைட்ஸ்:

  • காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தவர் அலைகழிப்பு
  • புகாரின் மீது காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சானி பவுடர் குடித்து விட்டு வந்த நபரால் பரபப்பு
  • உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்த கமிஷ்னர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil புகார் கொடுக்க வந்த நபர்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறை தீர்ப்பு நாளன்று அலுவலக வளாகத்தில் உடல்நிலை குன்றிய நிலையில் ஒருவர் நீண்ட நேரமாக அமர்ந்திருந்த நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களிடம் அது குறித்துக் கேட்டபொழுது தான் சானிபவுடர் குடித்துள்ளதாக கூறினார். உடனடியாக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அதன் பின்னர் அங்கு மருத்துவ சிகிச்சை அளித்த பிறகு அவரிடம் நடத்தி விசாரணையில் அவர் இருகூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன்(40) என்பதும், தான் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற பொழுது முறையாக புகார் குறித்து கேட்காமலும், விசாரிக்காமலும் தன்னை அலட்சியப்படுத்தியதால் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

கோவையின் கஜினி முஹமது; குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு மனுதாக்கல் செய்த தேர்தல் மன்னனின் கதை!

இதனையடுத்து புகாரை முறையாக விசாரிக்காமல் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பெயரில் தற்பொழுது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி