ஆப்நகரம்

பள்ளியில் இந்தி திணிப்பு? மறுக்கும் கோவை மாநகராட்சி ஆணையர்...

கோவையில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கையின் விண்ணப்பத்தில் இந்தி மொழி இடம்பெற்றுள்ள சர்ச்சைக்கு மாநகராட்சி ஆணையர் விளக்கமளித்துள்ளார்.

Samayam Tamil 19 Aug 2020, 5:27 pm
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறதுகோவை மாநகராட்சியில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யக்கூடிய 18 விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதில் 14ஆவது படிவத்தில் இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா அல்லது கைத்தொழில் பாடம் எடுக்க விரும்புகிறீர்களா என்ற கேட்கப்பட்டுள்ளது.
Samayam Tamil coimbatore corporation commissioner


இந்த விண்ணப் விவகாரம் வெளியானதையடுத்து, கோவை பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி மொழியை தேர்வு செய்து படிக்குமாறு கோரும் விண்ணப்பங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன என்று தமிழகம் முழுக்க பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம், அப்படியான விண்ணப்பத்தை வழங்கவில்லை என மறுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் கண்டன அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். இந்தியை மும்மொழியாக தேர்வு செய்து படிக்கும் தேசிய புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். அதன் தொடர்ச்சியாக முக்கிய அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று கூறி மும்மொழி கொள்கையை எதிர்த்தார்.


இந்நிலையில், தற்போது கோவையில் வெளியாகியுள்ள விண்ணப்பம் குறித்த சர்ச்சைக்கு மாநகராட்சி ஆணையர் ஸ்வரன்குமார் ஜடாவத் விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, ''இந்த விண்ணப்ப படிவம் போலியானது. இதனை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் வழங்கி இருக்க வேண்டுமேயானால் இங்குள்ள 84 பள்ளிகளிலும் வழங்கியிருக்க வேண்டும்.

''இது போன்ற விண்ணப்பங்கள் மாநகராட்சி தரப்பில் விண்ணப்பங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த விண்ணப்ப படிவம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்பாட்டில் இருந்துள்ளது. ஆனால், இது இந்தி மொழியை திணிப்பதற்காக கேட்கப்பட்ட கேள்வி அல்ல. பொதுவாக மாணவர்களுடைய விவரங்கள், அவர்களது பின்புலம், விருப்பங்களை சேகரிக்க சில கேள்விகள் கேட்கப்படும். இது அவ்வாறான கேள்வியாக தான் நடைமுறையில் இருந்தது.

''ஆனால், மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மாற்றப்பட்டுவிட்டது. இப்போது அந்த பழையை விண்ணப்பம் நடைமுறையிலேயே இல்லை. இதனை சித்தாப்புதூர் மாநகராட்சி பள்ளி நிர்வாகம் தான் தவறுதலாக வழங்கியுள்ளதாக தெரிகிறது.

மாநகராட்சி பள்ளிகளில் இந்தியை திணிக்கும் திட்டமா? - கோவையில் அதிர்ச்சி!

''தற்போது வழங்கப்பட்டு வரும் விண்ணப்பங்களில் இவ்விதமான கேள்விகள் எதுவுமே இடம்பெறாத போது, அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான விண்ணப்பத்தை உறுதி செய்யாமல் அறிக்கைவிட்டுள்ளது ஏற்புடையதல்ல'' என கூறினார்.

அடுத்த செய்தி