ஆப்நகரம்

7 டன் அளவிற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கோவையில் பறிமுதல்..!

கோவையில் 7 டன் அளவிற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

TNN 21 Mar 2017, 8:55 pm
கோவையில் 7 டன் அளவிற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
Samayam Tamil coimbatore corporation seizes 7 tonne of banned plastic bags
7 டன் அளவிற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கோவையில் பறிமுதல்..!


50 மைக்ரானுக்கு கீழுள்ள பாலிதீன் பைகளை விற்கக் கூடாது என்ற சட்டமிருந்தும், சில வியாபாரிகள் சட்டவிரோதமாக கோவையில் பாலிதீன் பைகளை விற்று வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அதிரடி சோதனையில் இறங்கிய அதிகாரிகள், ராஜா தெரு மற்றும் தாமஸ் தெரு பகுதிகளிலிருந்த கிட்டங்கியிலிருந்து சுமார் 5 டன் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர். இதற்கு முன்னாள் 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் 500 கிலோ அளவிற்கு தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டதே அதிக அளவாக இருந்து வந்தது.

இந்த தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், ஈரோட்டிலிருந்து தாமஸ் தெரு மற்றும் ராஜா தெருவில் உள்ள கிட்டங்கிகளுக்கு கொண்டு வரப்பட்டதாக கோவை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த துப்புறவு தொழிலாளர்களும், பாலிதீன் பைகள் கொண்டு செல்லப்பட்ட வாகனங்களை பார்த்து, உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து அந்த வாகனங்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அதிலிருந்த 2 டன் பிளாஸ்டிக்கை கைப்பற்றினர்.

”கோவை மாவட்டத்திலுள்ள வேலாண்டி பாளையம் பகுதியில் சுமார் எட்டு சிறு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், அவர்கள் சட்டவிதிகளை சரிவர பின்பற்றி வருவது தெரிந்தது. எனவே இந்த 7 டன் பிளாஸ்டிக் வெளியூரிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.” என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், வரும் மார்ச் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் இது குறித்த பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்த உள்ளதாகவும் கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Coimbatore Corporation seizes 7 tonne of banned plastic bags

அடுத்த செய்தி